அரியலூர் மாவட்டம் வண்ணான்குட்டை அருகே ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை அந்த வழியாக வரும் குழந்தைகள் மற்றும் பெண்களை கடிக்க பாய்கின்றன. இதனால் அவர்கள் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். மேலும், அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகனங்களின் குறுக்கே இவை திடீரென பாய்வதால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். இதனால் உயிர்சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.