கனரக வாகனங்களால் பொதுமக்கள் அவதி

Update: 2025-12-14 11:30 GMT

அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி கிராமம் முட்டுவாஞ்சேரியில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மட்டும் வாரச்சந்தை இயங்குகிறது. சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் இந்த சந்தைக்கு வந்து காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர். இந்த சந்தை எதிரே தனியார் சிமெண்டு ஆலை உள்ளது. இந்நிலையில் வாரச்சந்தையின் நுழைவுவாயில் பகுதியில் சிமெண்டு ஆலைக்கு செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் இதர கனரக வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றன. மேலும் மழைக்காலங்களில் இப்பகுதி சேறும், சகதியுமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் சந்தைக்குள் செல்ல முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் இப்பகுதியில் மின்விளக்கு வசதி இல்லாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்