வீடுகளை சூழ்ந்த மழைநீர்

Update: 2025-12-14 10:41 GMT

தஞ்சை மாரியம்மன் கோவில் பகுதியில் ஸ்ரீஅம்மன்நகர் மருங்கை ரோடு, சாய் நகர், அஞ்சலை அம்மாள் நகர், செல்லம்மாள் நகர், ரோஸ் கார்டன் ஆகிய பகுதிகள் உள்ளன. இங்கு ஏராளமான வீடுகள், குடியிருப்புகள் உள்ளது. மேற்கண்ட பகுதியில் முறையான மழைநீர் வடிகால் இல்லாததால் மழைக்காலங்களில் வீடுகளை மழைநீர் சூழ்ந்து கொள்கிறது. இதனால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், வேலைக்கு செல்பவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே,சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் ஆய்வு செய்து மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்