தெருநாய்கள் தொல்லை

Update: 2025-12-14 10:27 GMT

கோவை பாப்பநாயக்கன்பாளையம் செங்காடு பகுதியில் தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. அவை சாலைகளில் செல்வோரை துரத்தி சென்று கடிக்க முயல்கின்றன. அதுவும் இரவு நேரத்தில் அங்குள்ள சாலையில் செல்லவே பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சப்படுகிறார்கள். எனவே அங்கு சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட துறையினர் ஆவன செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்