ராமநாதபுரம் நகர் பகுதியில் தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது. இந்த தெருநாய்கள் சாலையில் செல்லும் வாகனஓட்டிகள், நடைபாதையினரை துரத்தி சென்று கடிக்கின்றன. மேலும் இவை ஒன்றை ஒன்று தாக்கி சண்டையிடுவதால் பெண்கள், குழந்தைகள் சாலையில் நடக்க அச்சமடைகின்றனர். எனவே தொல்லை தரும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.