சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள்

Update: 2025-12-14 10:02 GMT

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தேர்வுநிலை பேரூராட்சியில் நான்கு ரோடு, மூலக்கடை, அச்சுகட்டு, தம்பிபட்டி, புதுப்பட்டி,  தென்மாபட்டி, அண்ணாசிலை ஆகிய பகுதி சாலைகளில் கால்நடைகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன  மேலும் இந்த கால்நடைகள் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலையில் ஆங்காங்கே படுத்துக்கொள்கின்றன. இதனால் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்