குரங்குகள் அட்டகாசம்

Update: 2025-12-14 10:00 GMT

பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட அய்யன்கொல்லி பகுதியில் குரங்குகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. அவை கடைகளிலும், வீடுகளிலும் புகுந்து பொருட்களை சேதப்படுத்தி வருகின்றன. துரத்த முயன்றால் பொதுமக்களை கடிக்க பாய்கின்றன. இதனால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே அங்கு அட்டகாசம் செய்யும் குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்