சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா வெளியாந்தூர் ஊராட்சி தொடக்கப்பள்ளி அருகில் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழைய கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடம் சமுதாயம் கூடமாக செயல்பட்டு வந்த நிலையில் தற்போது எவ்வித பயன்பாடும் இன்றி கட்டிடத்தின் சுவர்கள் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் பள்ளி குழந்தைகள், அப்பகுதியினர் அச்சமடைந்து உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள கட்டிடத்தை சீரமைக்க வேண்டும்.