கோத்தகிரி காமராஜர் சதுக்கத்தில் இருந்து டான்போஸ்கோ செல்லும் சாலையோரத்தில் மூடப்படாத பள்ளம் ஒன்று, விபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ளது. அந்த வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன. வாகனங்கள் சாலையோரம் சென்றால் அந்த பள்ளத்தில் கவிழும் அபாயம் உள்ளது. குறிப்பாக இரவு நேரத்தில் விபத்து அபாயம் அதிகளவில் உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகத்தினர் அந்த பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.