நாய்கள் தொல்லை

Update: 2025-12-14 09:32 GMT

திருப்பூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து தாராபுரம் ரோட்டில் கோவில் வழி வரை ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்வோரை விரட்டுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீேழ விழுந்து விபத்துகளில் சிக்குகிறார்கள். மேலும் வாகனங்களில் நாய்களுக்கும் சிக்கி உயிரிழக்கும் நிலை உள்ளது. இதேபோல் நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகளை நாய்கள் விரட்டும் சம்பவங்களுக்கும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே பேராபத்துகள் ஏற்படும் முன் மக்களுக்கு தொல்லை தரும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் முன்வருவார்களா?

பாண்டிச்செல்வி, கோவில் வழி.

மேலும் செய்திகள்