மகளிர் சுகாதார வளாகம் திறக்கப்படுமா?

Update: 2025-12-14 09:32 GMT

மேற்குபதி ஊராட்சிக்கு உட்பட்ட சின்னேரிபாளையம் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டு உள்ளது. ஆனால் சுமார் ஒரு ஆண்டாகியும் இதுவரை திறக்கப்படவில்லை. கட்டுமானப் பணிகள் முடிவடைந்தும், மக்களின் பயன்பாட்டிற்கு கட்டிடம் இதுவரை திறக்கப்படாமல் பயன்பாடின்றி பூட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் கழிப்பறை வசதியின்றி திறந்தவெளி பயன்படுத்தும் சூழ்நிலை உள்ளது. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்படும் நிைல காணப்படுகிறது. எனவே மகளிர் சுகாதார வளாகத்தை உடனடியாக திறந்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

குமார், பெருமாநல்லூர்.

மேலும் செய்திகள்