தூர்வார வேண்டும்

Update: 2025-12-14 06:45 GMT

தேவிகோட்டில் இருந்து குற்றிபாறவிளைக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையோரத்தில் இடைக்கோடு குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தை அப்பகுதி மக்கள் குளிப்பதற்கும், விவசாயத்திற்கும் பயன்படுத்தி வந்தனர். தற்போது குளம் முழுவதும் ஆகாயத்தாமரை செடிகள் படர்ந்துள்ளதால், தண்ணீர் மாசடைந்து காணப்படுகிறது. இதனால், குளத்தை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதால் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், குளத்தின் கரைப்பகுதியும் சேதமடைந்து காணப்படுகிறது. எனவே, குளத்தை தூர்வாருவதுடன், கரைகளையும் சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்