விபத்து அபாயம்

Update: 2025-12-14 06:35 GMT

ஆற்றூர் பகுதியில் ஒரு கிறிஸ்தவ ஆலயம் முன் சாலையோரம் மாமரம், புளியமரம் என 2 மரங்கள் உள்ளன. இந்த மரங்களின் வேர் பகுதி சேதமடைந்து ஓட்டை விழுந்த நிலையிலும், மண்ணின் பிடிப்பற்ற நிலையிலும் காணப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் காற்றின் வேகத்தில் இந்த மரங்கள் முறிந்து விழுந்து அந்த வழியாக செல்லும் பள்ளி மாணவ-மாணவிகள், பாதசாரிகள், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, மாணவ-மாணவிகள் நலன்கருதி ஆபத்தான நிலையில் காணப்படும் 2 மரங்களையும் வெட்டி அகற்றிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்