நோயளிகள் அவதி

Update: 2025-12-07 14:04 GMT

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் அரசு தாலுகா தலைமை மருத்துவமனை உள்ளது. இங்கு தினமும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்குள்ள ஜெனரேட்டர் இயங்கவில்லை. இதனால் மின்சாரம் இல்லாதபோது நோயாளிகள் அவதிப்படுகின்றனர். குறிப்பாக ரத்த பரிசோதனை, இ.சி.ஜி. பிசியோதெரபி போன்ற பணிகள் பாதிக்கப்படுவதுடன் இருட்டான அறைகளில் டாக்டர்கள் பணி செய்கின்றனர். மேலும் உள்நோயாளிகளும் சிரமப்படுகின்றனர். எனவே கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் உள்ள ஜெனரேட்டரை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்