கிடப்பில் போடப்பட்ட வாய்க்கால் அமைக்கும் பணி

Update: 2025-12-07 13:11 GMT

கரூர் மாவட்டம் காதப்பாறை ஊராட்சி வாங்கப்பாளையம் பகுதியில் கழிவுநீர் செல்ல கழிவுநீர் செல்ல வழியின்றி சாலையில் தேங்கி நின்ற நிலையில், கழிவுநீர் கால்வாய் அமைத்துத் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இந்நிலையில் கால்வாய் முழுமையாக அமைக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். எனவே கழிவுநீர் கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்