சிதலமடைந்த படிக்கட்டுகள்

Update: 2025-12-07 12:50 GMT

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காமராஜபுரம் பகுதியில் ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் ஓரமாக நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீர்த்தேக்க தொட்டியின் படிக்கட்டுகள் சிதலமடைந்து காணப்படுகிறது. இதனால் மாணவ-மாணவிகள் நடமாட்டத்தின்போது இந்த படிக்கட்டுகள் இடிந்து விழுந்தால் உயிரிழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து குடிநீர் தொட்டியின் படிக்கட்டுகளை சரி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்