உழவர் சந்தையை மேம்படுத்த வேண்டும்

Update: 2025-12-07 11:40 GMT

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி டி.இ.எல்.சி. சாலையில் உழவர் சந்தை உள்ளது. இங்கு 29 கடைகள் கட்டப்பட்டுள்ளதன. ஆனால் தற்போது ஒரு காய்கறி கடை மட்டுமே செயல்பட்டு வருகிறது. மற்ற கடைகள் பயன்படுத்தப்படாமல் உள்ளன. அதே வேளையில் கறம்பக்குடி திருவோணம் சாலையில் சாலை ஓரங்களில் கீரைகள், கிழங்குகள், காய்கறிகள் போன்றவற்றை விற்பனை செய்து வருகின்றனர்.இதனால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. எனவே சாலை ஓரங்களில் செயல்படும் கடைகளை உழவர் சந்தைக்கு மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்