போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2025-12-07 11:32 GMT

கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும் சாலையோரத்தில் நடைபாதை உள்ளது. இந்த நடைபாதையில் ஆஸ்பத்திரியில் நடைபெறும் கட்டுமான பணிக்காக கொண்டு வரப்பட்ட தகர சீட்டுகள் வைக்கப்பட்டு உள்ளன. இதன் காரணமாக பாதசாரிகள் சாலையில் நடந்து செல்லும் நிலை உள்ளது. இதனால் அவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் காணப்படுகிறது. மேலும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுகிறது. எனவே அந்த தகர சீட்டுகளை உடனடியாக அகற்ற சம்பந்தப்பட்ட துைறயினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்