ஊட்டியில் உள்ள நடைபாதைகளின் ஓரங்களில் பாதசாரிகள் பாதுகாப்புக்காக தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த கம்பிகள் பல இடங்களில் சேதம் அடைந்து கிடக்கின்றன. குறிப்பாக ஆவின் எதிரே உள்ள நடைபாதையில் தடுப்பு கம்பிகள் உடைந்து அங்கேயே கீழே விழுந்து கிடக்கிறது. இதனால் நடைபாதையில் சென்று வரும் பாதசாரிகள் கடும் அவதிப்படுகிறார்கள். எனவே நடைபாதை ஓரங்களில் அமைக்கப்பட்டு உள்ள தடுப்பு கம்பிகளை முறையாக பராமரிக்க வேண்டும்.