ஈரோடு பெரியார் அரசு தலைமை ஆஸ்பத்திரி பஸ் நிறுத்தம் அருகே தற்காலிக கழிப்பறை அமைக்கப்பட்டுள்ளது. இதை பஸ் ஏற வரும் பயணிகள் பயன்படுத்தி வந்தனர். பெண்களுக்கும் கழிப்பிடம் உள்ளது. ஆனால் இந்த கழிப்பறை கடந்த சில நாட்களாக பூட்டி கிடக்கிறது. இதனால் பயணிகள் கழிப்பறை அருகே உள்ள திறந்தவெளியில் இயற்கை உபாதை கழித்து வரும் நிலை உள்ளது. இதன் காரணமாக துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேட்டை தடுக்க அதிகாரிகள் முன்வருவார்களா?