‘தினத்தந்தி’க்கு பாராட்டு

Update: 2025-12-07 09:41 GMT

ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட 5-வது வார்டில் உள்ள கங்காபுரம் பகுதியில் குழாய் உடைந்து குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது. இதனால் பொதுமக்கள் குடிநீரின்றி பாதிக்கப்படுகிறார்கள். எனவே குழாய் உடைப்பை சரிசெய்து அந்த பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற செய்தி ‘தினத்தந்தி’ புகார் பெட்டி பகுதியில் வெளியானது. இதைத்தொடர்ந்து குழாய் உடைப்பு சரிசெய்யப்பட்டுள்ளது. செய்தி வெளியிட்டு உதவிய ‘தினத்தந்தி’-க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் சார்பில் நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்