மேல்மலையனூர் அருகே முருகன் தாங்கல்பட்டி கிராமத்தில் தாழ்வாக சென்ற மின் கம்பிகளை சரிசெய்ய மின் கம்பம் நட சுமார் 20 நாட்களுக்கு முன்னர் சாலையோரத்தில் பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் இதுநாள்வரை பணியும் முடிக்கப்படாமலும், பள்ளமும் மூடப்படாமல் உள்ளதால் குழந்தைகள், பெரியவர்கள் அதில் விழுந்து விபத்துகளில் சிக்கும் நிலை உருவாகியுள்ளது. விபத்து ஏதும் ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பணிகளை முடித்து பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.