கொல்லிமலை செம்மேட்டில் பஸ் நிலையம் உள்ளது. இங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் நிலையத்தில் சமீபகாலமாக தெருநாய்கள் தொல்லை அதிகளவில் உள்ளது. இதனால் பயணிகள் அச்சத்துடனேயே பஸ் நிலையத்துக்கு வந்து செல்கின்றனர். மேலும் இருசக்கர வாகனங்களையும், நடந்து செல்பவர்களையும் கூட்டமாக சேர்ந்து கடிக்க துரத்துகின்றன. இதன் காரணமாக விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இங்கு சுற்றித்திரியும் தெருநாய்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் முன் வர வேண்டும்.