கிருஷ்ணகிரி நகரில் பெங்களூரு சாலை, சென்னை சாலை பகுதிகளில் மாடுகள் அதிக அளவில் சுற்றுகின்றன. இதனால் வாகன ஓட்டிகளுக்கு மிகவும் இடையூறாக இருக்கிறது. குறிப்பாக இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்களின் குறுக்கே மாடுகள் சென்று விபத்தை ஏற்படுத்தி விடுகின்றன. கிருஷ்ணகிரி நகராட்சி எல்லை பகுதியில் சாலைகளில் மாடுகளை அவிழ்த்து விடக்கூடாது என்று நகராட்சி சார்பில் அறிவித்தும் தொடர்ந்து சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிகின்றன. எனவே நகராட்சி அதிகாரிகள் இதை கண்காணித்து சாலைகளில் மாடுகளை அவிழ்த்து விடுபவர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.