திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியம் சின்னக் களக்காட்டுர் கிராமத்தில் உணவு தானிய சேமிப்பு கிடங்கு உள்ளது. அங்கு சுற்று சுவர் இல்லாததால் கால்நடைகள் சுற்றி திரிகின்றன. மேலும், இரவு நேரங்களில் மதுகுடிக்கும் இடமாகவும் மாறியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்துடனே அந்த பகுதியை கடந்து செல்கின்றனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சேமிப்பு கிடங்கிற்கு புதிய சுற்று சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.