திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு நகராட்சி கீழ் அயனம்பாக்கம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் போதுமான மருத்துவ வசதி இல்லாததால் மழைக்காலங்களில் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். சிகிச்சைக்காக பல தூரம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.