ராதாபுரம்- வள்ளியூர் சாலையில் பாப்பான்குளம் விலக்கில் அரசு தொழிற்பயிற்சி நிலையத்துக்கு செல்லும் சாலையை குறிப்பிடும் வகையில் வழிகாட்டி பலகை உள்ளது. இந்த பெயர் பலகை சேதமடைந்து புதர் செடிகளுக்குள் சரிந்து கிடக்கிறது. எனவே அங்கு பெயர் பலகையை மீண்டும் சீரமைத்து நிறுவிட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.