கரூர் மாவட்டம், காதப்பாறை ஊராட்சி வாங்கப்பாளையம் காந்தி நகர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் மழைநீர் செல்லும் வகையில் சாலை ஓரத்தில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி தொடங்கப்பட்டு 2 மாதங்கள் ஆகியும் பணி முழுமை பெறாமல் உள்ளது என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து கழிவுநீர் அமைக்கும் பணியை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர். இதற்கு செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.