புதர் செடிகள் அகற்றப்படுமா?

Update: 2025-11-23 09:58 GMT

கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பின்புறம் உள்ள குடியிருப்பு பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு செல்லும் சாலையின் இருபுறமும் புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்து உள்ளன. அந்த புதர் செடிகள் மத்தியில் காட்டெருமைகள் உலா வருகின்றன. அவை மறைந்து இருப்பது வெளியே தெரிவது இல்லை. இதனால் பொதுமக்கள் தாக்குதலுக்கு ஆளாகும் நிலை உள்ளது. எனவே அந்த பகுதியில் உள்ள புதர் செடிகளை உடனடியாக வெட்டி அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்