மதுரை மாநகராட்சி 7-வது வார்டு திருப்பாலை- உச்சபரம்பு செல்லும் சாலையில் தெரு நாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இதனால் அந்த பாதையில் செல்லும் பொதுமக்கள் .பள்ளிக் குழந்தைகள் மிகவும் அச்சத்துடனேயே செல்கின்றனர். மேலும் வாகன ஓட்டிகளையும் துரத்தி சென்று விபத்துகளை ஏற்படுத்தி வருகின்றது. எனவே தொல்லை தரும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்குமா?