கொடைக்கானல் தாலுகா அட்டுவம்பட்டி காலனி பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. சாலையில் நடந்து செல்லும் பள்ளி மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் என அனைத்து தரப்பினரையும் தெருநாய்கள் துரத்திச்சென்று அச்சுறுத்துகின்றன. எனவே தொல்லை கொடுக்கும் தெருநாய்களை பிடித்து காப்பகத்தில் அடைக்க வேண்டும்.