கடமலைக்குண்டுவை அடுத்த முத்தாலம்பாறை வாய்க்கால் பகுதிக்கு செல்லும் சாலையின் இருபுறமும் செடி-கொடிகள் வளர்ந்து புதர்போல் காட்சியளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே சாலையின் இருபுறமும் புதர்போல் வளர்ந்துள்ள செடி-கொடிகளை அகற்ற வேண்டும்.