சேந்தமங்கலத்தில் இருந்து காந்திபுரம் செல்லும் சாலை அருகே கால்நடை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனை அருகில் பாழடைந்த கிணறு உள்ளது. இதில் அப்பகுதியை சேர்ந்த சிலர் குப்பைகளை கொட்டி வருகின்றனர். அப்பகுதியை சேர்ந்த சிலர் அந்த கிணற்றில் அருகில் உட்கார்ந்தும் சில சமயங்களில் கிணற்றின் சுற்றுச்சுவர் மேல் ஏறி உட்கார்ந்தும் பாதுகாப்பாற்ற நிலையில் இருந்து வருகின்றனர். எனவே அங்கு அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பு அந்த கிணற்றை மூட வேண்டும் என்று அப்பகுதியினர் எதிர்பார்த்து வருகின்றனர்.
-லலிதா, காந்திபுரம்.