பவானி அருகே கவுந்தப்பாடி ஊராட்சிக்குட்பட்ட 6-வது வார்டில் பட்டத்தரசி அம்மன் கோவிலுக்கு பின்புறம் பொது கழிப்பிடங்கள் உள்ளன. இவற்றை சுற்றிலும் செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. இதனால் கழிப்பிடத்தை பயன்படுத்த முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது. மேலும் விஷப்பூச்சிகள் நடமாட வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். புதரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?