ஸ்ரீவைகுண்டம் அருகே கருங்குளம் யூனியன் விட்டிலாபுரம் பஞ்சாயத்தில் வீட்டுமனைகளின் அருகில் திறந்தவெளியில் தரைமட்ட கிணறு உள்ளது. அந்த வழியாக செல்லும் கால்நடைகள் அடிக்கடி கிணற்றுக்குள் தவறி விழுகின்றன. எனவே பெரும் அசம்பாவிதம் நிகழும் முன்பாக தரைமட்ட கிணற்றைச் சுற்றிலும் தடுப்பு கம்பி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.