நிழற்குடை அமைக்க கோரிக்கை

Update: 2025-11-16 12:52 GMT

கரூர் மாவட்டம் செல்லாண்டிபட்டி பஸ் நிறுத்தம் கரூர் -வெள்ளியணை சாலையில் அமைந்துள்ளது. இந்த பஸ் நிறுத்தத்திற்கு வந்து திருமுடிகவுண்டனூர், செல்லாண்டிபட்டி, குமாரபாளையம், வேலாயுதம்பாளையம் மற்றும் சுற்றுப் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அதிக அளவில் பஸ் ஏறியும், இறங்கியும் செல்கின்றனர். இந்த பஸ் நிறுத்த பகுதியில் பயணியர் நிழற்குடை இல்லாததால் வெயில் மற்றும் மழை காலங்களில் பஸ் ஏற காத்திருக்கும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு இந்த பகுதியில் நிழல் குடை அமைத்து தரவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்