பொதுமக்கள் அச்சம்

Update: 2025-11-16 12:50 GMT

கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை காந்திகிராமம் பகுதியில் அமைந்துள்ளது. இந்த மருத்துவமனைக்கு தினந்தோறும் ஆயிரம் கணக்கில் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்த மருத்துவமனை வளாகத்தில் நாய்கள் அதிக அளவில் ஆங்காங்கே சுற்றித்திரிந்தும், படுத்தும் கிடக்கின்றன. இது மருத்துவமனைக்கு வரும் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. எனவே உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தை நாய்கள் இல்லாத பாதுகாப்பான பகுதியாக மாற்றி தர வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்