திருப்பூர் புதுக்காடு பகுதியில் உள்ள கழிவறை முறையாக பராமரிப்பு இல்லாததால் சேதமடைந்து மோசமான நிலையில் காணப்படுகிறது. கழிவறையின் மேற்கூரையில் விரிசல் ஏற்பட்டு சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. எனவே அசம்பாவிதம் ஏற்படும் முன் கழிப்பறை கட்டிடத்தை சீரமைக்க வேண்டும்.