கம்பம் உலகத்தேவர் நகராட்சி 1-வது, 2-வது வார்டுகளை இணைக்கும் உலகத்தேவர் தெருவில் உள்ள சாக்கடை கால்வாய் பாலம் சேதமடைந்த நிலையில் உள்ளது. மேலும் அந்த பாலத்தின் மைய பகுதியில் சிமெண்டு பூச்சுகள் உடைந்து பள்ளமும் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த சாக்கடை கால்வாய் பாலத்தை விரைந்து சீரமைக்க வேண்டும்.