தெருநாய்கள் தொல்லை

Update: 2025-11-09 15:36 GMT

விருதுநகர் மாவட்டம் தாயில்பட்டி, வெம்பக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார கிராம பகுதிகளில் தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன் விபத்துகளும் அவ்வப்போது நடக்கிறது. இதனால் அப்பகுதியில் பயணிக்கும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அச்சத்துடனேயே பயணிக்கின்றனர். எனவே தொல்லை தரும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்