கரூர் மாவட்டம் புன்செய் தோட்டக்குறிக்கி பேரூராட்சி தோட்டக்குறிச்சி பஸ் நிறுத்தத்தில் இருந்த பயணிகள் நிழற்குடை சிதிலமடைந்து இடிந்துவிழும் நிலையில் இருந்தது. இதனால் பழைய நிழற்குடையை இடித்துவிட்டு புதிய நிழற்குடை கட்டித்தர வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்னர். இதையடுத்து பழைய நிழற்குடை இடிக்கப்பட்டு, புதிய நிழற்குடை அமைப்பதற்காக அடிமட்டம் அமைக்கப்பட்ட நிலையில், இன்னும் பயணிகள் நிழற்குடை கட்டப்படாமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இதனால் இப்பகுதிக்கு பஸ் ஏற வரும் பயணிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிழற்குடை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.