எலும்புக்கூடாக காட்சியளிக்கும் மின்கம்பம்

Update: 2025-11-09 13:50 GMT
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே வானரமுட்டியை அடுத்து கழுகுமலை செல்லும் சாலையோரம் உள்ள மின்கம்பத்தின் சிமெண்டு பூச்சுகள் முழுவதும் பெயர்ந்து விழுந்து எலும்புக்கூடாக காட்சி அளிக்கிறது. இதனால் பலத்த காற்றில் மின்கம்பம் சரிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே ஆபத்தான மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
-பாலமுருகன், கோவில்பட்டி

மேலும் செய்திகள்