அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள முத்துசேர்வாமடம் ஊராட்சி முக்குளம் கிராமம் மற்றும் நெல்லித்தோப்பு கிராமத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் பொதுமக்களுக்கு முக்குளம் கிராமத்தில் இருந்து நெல்லித்தோப்பு செல்லும் சாலையில் மயானம் உள்ளது. இந்த மயானத்தில் உள்ள பகுதிகளை சிலர் நான்கு புறமும் முள் வேலி அமைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் பொதுமக்கள் இறந்தவர்களின் உடலை தகனம் செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.