கரூர் வெங்கமேடு, தாந்தோணிமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் தெருநாய் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவை அவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை துரத்தி கடிக்க பாய்கிறது. இதனால் அவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தெருநாய் தொல்லை கட்டுப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.