தெற்கு சூரங்குடி வடலிகாட்டுவிளை சந்திப்பில் மணியன்விளை நோக்கி செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையோரத்தில் கழிவுநீர் ஓடை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அதன் மீது கான்கிரீட் சிலாப்புகள் அமைக்காமல் திறந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் இந்த சந்திப்பு பகுதிகளில் வரும் வாகன ஓட்டிகள் இடதுபுறம் திரும்பும்போது கழிவுநீர் ஓடைக்குள் விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி கழிவுநீர் ஓடையின் மீது கான்கிரீட் சிலாப்புகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-லிங்கேஸ்வரன்,தெற்கு சூரங்குடி.