தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும்

Update: 2026-02-22 12:36 GMT

இறச்சகுளத்தில் இருந்து ஈசாந்திமங்கலம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையின் மேற்கு புறத்தில் கால்வாய் பாய்கிறது. இந்த கால்வாய் கரையில் விபத்து தடுப்பு பக்கச்சுவர் அமைக்கப்படாமல் காணப்படுகிறது. இதனால், இந்த சாலையில் செல்லும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர் நிலைதடுமாறி கால்வாய்க்குள் பாய்ந்து விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பலர் விபத்தில் சிக்கியுள்ளனர். எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி கால்வாய் கரையில் விபத்து தடுப்புச்சுவர் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-நாராயணன், மருங்கூர். 

மேலும் செய்திகள்