காட்பாடி ரெயில்வே மேம்பாலம் முதல் கடலூர் வரை தேசிய நெடுஞ்சாலை கட்டுப்பாட்டில் உள்ளது. காட்பாடி-வேலூர் நெடுஞ்சாலையில் பல இடங்களில் ஆங்காங்கே பழுதுகள் ஏற்பட்டு உள்ளன. ஒருசில இடத்தில் பஞ்சர் ஒட்டு போடப்பட்டுள்ளது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள், ஆட்டோக்கள் அவதிப்படுகின்றனர். நீண்ட காலமாக சரி செய்யப்படாமல் உள்ள காட்பாடி-வேலூர் சாலையை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுதாகர், செங்குட்டை.