பல்லடத்தை சுற்றியுள்ள பொது இடங்களில் பிரமாண்டமான பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு கவனச் சிதறல் ஏற்பட்டு விபத்துகள் மூலம் உயிரிழப்பு சம்பவங்கள் அரங்கேறுகிறது. மக்கள் கூடும் முக்கிய இடங்களான பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில், அதிக எடை கொண்ட இரும்பு ராடுகள் போன்ற பொருட்களை வைத்து அதிக எடையுடன் பிரமாண்ட பதாகைகளை வைக்கிறார்கள். இது சாய்ந்து விழுந்தால் அருகிலிருப்பவர்களுக்கு உயிரிழப்பு ஏற்படும் அபாயம்உள்ளது. இதற்கு அரசு அனுமதியளிக்க கூடாது. எனவே உயிர் இழப்பு ஏற்படுத்தக்கூடிய இது போன்ற பதாகைகளை முற்றிலும் தடை செய்ய வேண்டும். விதிமுறைகளை மீறி பல்லடம் பகுதிகளில் பதாகைகள் வைப்போர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுத்து விபத்து, உயிரிழப்பை தடுக்க வேண்டும்.
-கந்தசாமி, பல்லடம்.