புகார்பெட்டி செய்தி எதிரொலி

Update: 2025-11-02 17:03 GMT
தியாகதுருகம் புக்குளம் திருமலை நகரில் புதிதாக தார்சாலை போடப்பட்டது. ஆனால் அங்குள்ள மின்கம்பத்தின் ஸ்டே கம்பி சாலையில் இருந்து அகற்றப்படாமல் இருந்தது. இதனால் அங்கு விபத்து ஏற்படும் சூழ்நிலை உருவானது. இதுகுறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதையடுத்து சாலையில் இருந்த ஸ்டே கம்பியை அதிகாரிகள் அகற்றி அதனை சாலையோரம் நட்டனர். இதனால் மகிழ்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் தினத்தந்திக்கும், அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்