கொடுமுடி அருகே சென்னசமுத்திரம் பேரூராட்சிக்குட்பட்ட 1-வது வார்டில் உள்ள கொல்லம்புதுப்பாளையம் மெயின் வீதியில் டிரான்ஸ்பார்மர் மற்றும் மின்மோட்டார் ஒயர் மீது வேப்பமரத்தின் கிளைகள் உரசியபடி நிற்கிறது. எனவே மரக்கிளைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற செய்தி ‘தினத்தந்தி’ புகார் பெட்டி பகுதியில் படத்துடன் வெளியானது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். செய்தி வெளியிட்டு உதவிய ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் சார்பில் நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.